எங்கிருந்து வந்தாயோ

Yengirindhu Vandhayo Lyrics in Tamil
Song Name: Yengirindhu Vandhayo
Movie: Kayal(கயல்)
Music: D. Imman
Singer: Shreya Ghoshal
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Yengirindhu Vandhayo Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்: எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே

பெண்: அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

பெண்: எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே

பெண்: அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

—பின்னணி இசை—

பெண்: வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியிறியே

பெண்: ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கரையிரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே

பெண்: அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

பெண்: எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ

—பின்னணி இசை—

பெண்: நடக்கையில தொடர்ந்து வர
நடு நடுவே மறஞ்சுடுர
தலைமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர

பெண்: கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே

பெண்: அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

—பின்னணி இசை—

பெண்: ம்ம் ம்ம் உயிரோடு உறைந்தாயே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team