பறவையா பறக்குறோம்

Paravayaa Parakkurom Lyrics in Tamil
Song Name: Paravayaa Parakkurom
Movie: Kayal(கயல்)
Music: D. Imman
Singer: Haricharan
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Paravayaa Parakkurom Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்
போற வழியில பூவா சிரிக்கிறோம்
ஆண் குழு: சிரிக்கிறோம் சிரிக்கிறோம்

ஆண்: இந்த ஊரு உலக உறவா நினைக்கிறோம்
ஆண் குழு: நினைக்கிறோம் நினைக்கிறோம்

ஆண்: ஏ வீடு வாசல் வீதி ஒன்னும் வேணா
ஏ காடு மேடு கடலத் தாண்டி போவோம்
சூரியன் போல நாங்க சுழலுவோம்
சோகம் வந்தா குப்பையில வீசுவோம்

ஆண்: பூமி பந்து மேல ஒத்தையடி பாத போடுவோம்
அந்த வானவில் எங்களுக்கு ஜோடி
நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி
மேகம் ஏறி வெரசா நடப்போமே
அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே

—பின்னணி இசை—

ஆண்: பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம் ஹே

—பின்னணி இசை—

ஆண்: ஏ ஆடு மாடு கோழி எங்க கூட்டு
அத போல வாழ தேவையில்ல நோட்டு
கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல
ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல ஹே ஹே

ஆண்: நாளை என்ன ஆகும்
எண்ணி வாழ மாட்டோம்
இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல
நாங்க உள்ள வர துள்ளி விளையாட
காலம்பூரா கவலை கிடையாது ஹே ஹே
நாங்க போற பாதை எதுவும் முடியாதே

ஆண்: பறவையா பறக்குறோம்
காத்துல மிதக்குறோம்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team