என் ஆள பாக்க போறேன்

Yen Aala Paaka Poren Lyrics in Tamil
Song Name: Yen aala Paaka Poren
Movie: Kayal(கயல்)
Music: D. Imman
Singers: Shreya Ghoshal and K. G. Ranjith
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Yen Aala Paaka Poren Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்: என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

பெண்: என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

பெண்: அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே என்ன தரபோறேன்

—பின்னணி இசை—

பெண்: வீட்ட விட்டு வந்துட்டேனு
சொல்ல போறேன்
கூட்டிக்கிட்டு போயிடுனு
சொல்ல போறேன்

பெண்: இததான் எதிா்பாா்த்து
நான் கிடந்தேன் உயிா் வோ்த்து

பெண்: என சொல்லி ஆசையில் அல்லாடுவான்
மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்
அத நான் பாத்தே அழபோறேன்

பெண்: என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

—பின்னணி இசை—

ஆண்: உன்னாலதான் தூங்கலனு
சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு
சொல்லப் போறேன்
புதுசா புழுகாம
ரொம்ப பெருசா வழியாம

ஆண்: அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா
ஆக போகுறனு அப்பாவியா
நானே கேட்டு வரப்போறேன்

பெண்: என் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

பெண்: அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே என்ன தரபோறேன்

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team