Dhrogam Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண் குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண்: கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்
ஆண் குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண்: மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்
ஆண் குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண்: நீ வாய் திறந்து கேட்டிருந்தால்
உயிரை கூட கொடுத்திருப்பேன்
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால்
என்னை நானே எரித்திருப்பேன்
ஆண்: அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய்
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே
நகம் என்று நினைத்து நறுக்கிவிட்டாய்
விரல்கள் எனக்கு வலிக்கிறதே
ஆண் குழு: துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
ஆண்: கடவுள் தூங்கும் நேரம் பார்த்து
சாத்தான் ஆடும் ஆட்டம்
ஆண் குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண்: மனிதன் தூங்கும் நேரம் பார்த்து
பாசம் போடும் வேஷம்
ஆண் குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண் குழு: துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
—பின்னணி இசை—
ஆண்: தந்தை முகம் பார்த்ததில்லை
தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை
அண்ணன் என நினைத்தவனே
ஆயுதமானதை அறியவில்லை
ஆண்: உன் கையாக நான் இருந்தேன்
நம்பிக்கையை உடைத்துவிட்டாய்
உன் கண்ணாக நான் இருந்தேன்
கண்ணீர் துளியை பரிசளித்தாய்
ஆண்: தாகத்திலே மனம் தவிக்கையிலே
விஷத்தை கொடுப்பதில் முறையும் இல்லை
ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம்
யுத்த களத்திற்கு புதிது இல்லை
ஆண் குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம் துரோகம்