Uyire Uyire Piriyadhey Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: உயிரே உயிரே பிரியாதே
உயிரைத் தூக்கி எறியாதே
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே ஓஓஹோ
ஆண்: கனவே கனவே கலையாதே
கண்ணீா் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே ஓஓஹோ
ஆண்: பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி தந்தாயே
ஆண்: ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே
ஆண்: உயிரே உயிரே பிரியாதே
உயிரைத் தூக்கி எறியாதே ஓஓஹோ
—பின்னணி இசை—
ஆண்: புல் மேல் வாழும்
பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்
ஆனால் பொற்காலம்
ஆண்: உன் அருகாமை
அதை நான் இழந்தாலும்
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்
ஆண்: கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்
—பின்னணி இசை—
ஆண்: உயிரே உயிரே பிரியாதே
உயிரைத் தூக்கி எறியாதே
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே
—பின்னணி இசை—
ஆண்: உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே
ஆண்: உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே
ஆண்: நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே
—பின்னணி இசை—
ஆண்: உயிரே உயிரே பிரியாதே
உயிரைத் தூக்கி எறியாதே
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே
ஆண்: கனவே கனவே கலையாதே
கண்ணீா் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே
—பின்னணி இசை—




