அமெரிக்கா என்றாலும்

Song Name: America Yendralum Aandipatti Yendralum
Movie: Santosh Subramaniam(சந்தோஷ் சுப்ரமணியம்)
Music: Devi Sri Prasad
Singers: Naveen, Premgi Amaren, Manikka Vinayagam, Pushpavanam Kuppusamy and Priya Himesh
Lyricist: Viveka(விவேகா)
Year: 2008

America Yendralum Aandipatti Yendralum Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: யே அமெரிக்கா என்றாலும்
ஆண்டிபட்டி என்றாலும்
காதல் செஞ்சா குத்தம் சொல்ல
ஊரே வருதுடா ஹேய்

—பின்னணி இசை—

ஆண்: அமெரிக்கா என்றாலும்
ஆண்டிபட்டி என்றாலும்
காதல் செஞ்சா குத்தம் சொல்ல
ஊரே வருதுடா

ஆண்: ஒன் டே கிரிக்கெட் போயாச்சு
ட்வென்டி ட்வென்டி வந்தாச்சு
ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்லடா

ஆண்: முருகா முருகா ஓ மை முருகா
உன்னை போல ரெண்டு பொண்ணா
நாங்க கேட்குறோம்

ஆண்: முருகா முருகா ஓ மை முருகா
சிங்கிள் பொண்ண ஓகே பண்ண
செத்து பொழைக்கிறோம்

ஆண் மற்றும் பெண் குழு: லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்
ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

ஆண்: ஹோய் அமெரிக்கா என்றாலும்
ஆண்டிபட்டி என்றாலும்
காதல் செஞ்சா குத்தம் சொல்ல
ஊரே வருதுடா டோய்

—பின்னணி இசை—

ஆண்: லவ் ஹஸ் நோ காஸ்ட் ஆர் ரிலிஜியன்
டூ ஹார்ட்ஸ் ஷேர் எ லாட் ஆப் பேஷன்
பேரன்ட்ஸ் வில் நெவெர் எவர் லெட் தன் ஹப்பன்
பட் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

—பின்னணி இசை—

ஆண்: ஹேய் மீசை ஆரம்பிக்கும் போது
பாசம் யாவும் புரியாது
காதல் என்பது ஒன்னும் இல்லடா
வயசு செய்யும் மோசம்

ஆண்: அட வேடந்தாங்களுக்கு போயும்
காகம் பார்த்து என்ன லாபம்
காதல் ஒன்றுதான் இளமை காலத்தில்
எங்களோட சுவாசம்

ஆண்: நாங்க வச்ச பாசத்த கொச்சை செய்வது
பச்ச துரோகம்தானே
உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில்
எங்க தியாகம்தானே

ஆண்: தந்தை பிள்ளையின் உறவு
ஏதோ சந்தை தரகு இல்லை
உங்க பாசத்த என்றும் எங்கள்
நெஞ்சம் மறந்ததில்ல

ஆண் மற்றும் பெண் குழு: லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்
ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

—பின்னணி இசை—

ஆண்: ஹேய் அமெரிக்கா என்றாலும்
ஆண்டிபட்டி என்றாலும்
காதல் செஞ்சா குத்தம் சொல்ல
ஊரே வருதுடா டா டா டா டா டா

பெண்: ஹேய் ஸ்டாப் தி மியூசிக்
ஒன் டூ த்ரீ போர்

பெண்: ஹ்ம்ம் ஆஆ எழில் முக ராதா இமைகளின் ஓரம்
குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள்
கர மலர் ஏந்த கார்மேக வண்ணன்
கரையிலா கடல் போல அலை பாய்கிறேன்

பெண்: ராதையின் தேடல் என்ன
கண்ணன் மறந்ததில்லை
தேவகி பாலனின்றி
ராதை கண்ணில் தூக்கமில்லை
ராதை கண்ணில் தூக்கமில்லை

—பின்னணி இசை—

ஆண்: ஹேய் காசு தேவைப்படும் போது
கால சுத்தி வருவீங்க
காதல் வந்ததும் பேச்ச மீறியே
கால வாருவீங்க

ஆண்: அடடாடா பள்ளி காலமது வேறு
பருவ காலமிது வேறு
எங்க பேச்சையே மனசு கேக்கல
என்ன செய்வோம் போங்க

ஆண்: கட்டுப்பாடுதான் இல்லா படகு
கரையை சேர்ந்திடாது
கட்டி போட்டுதான் வச்சா
படகு கடல பார்த்திடாது

ஆண்: காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு
அப்பா தெரியாது
மகனை நேசிக்கும் அப்பாவிக்கிது
தப்பா தெரியாது

ஆண் மற்றும் பெண் குழு: லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்
ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team