Soda Bottle Lyrics in Tamil
ஆண்: அஞ்சு கிலோ அரிசி வாங்கி
பஞ்சு பஞ்சா வேக வச்சி
ஆண் குழு: ஜன் ஜன் ஜன் ஜன்
ஆண்: பானையிலே ஊத்தி அத
பொதச்சு வச்சோம் மண்ணுக்குள்ள
ஆண் குழு: ஜன் ஜன் ஜன் ஜன்
ஆண்: போதையிலே சுண்ட கஞ்சி
பொதச்ச இடம் தெரியலியே
ஆண் குழு: ஜன் ஜன் ஜன் ஜன்
ஆண்: ஆஹா ஆஹா
வடபழனி முருகா அட்ரா மச்சி
—பின்னணி இசை—
ஆண்: சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
—பின்னணி இசை—
ஆண்: வாடா வாடா மாப்புள்ள
வகுத்திருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
—பின்னணி இசை—
ஆண்: ஹே வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சு பாருடா
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிடேன்டா
வருஷத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது கேக் இல்ல கையு காலுடா
ஆண்: என் பேரு ஆறுடா
ஊரு அடையாறுடா
டீலுன்னு வந்தாக்க டார் டார் டார்
ஆண்: ஹே கூவும் நதி ஓரத்துல
ஹே குந்திகின்னு கூவிகினோம்
ஹே சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி ஊத்திகினோம்
ஆண்: சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
ஆண்: வாடா வாடா மாப்புள்ள
வகுத்திருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
—பின்னணி இசை—
ஆண்: ஹே பள்ளிகூடம் போகும்போது
அருவாளால பென்சில் சீவுவேன்
புடிச்ச நிறம் ரத்தமுன்னு
பிளேடாலதான் நான் கிறுக்கினேன்
ஆண்: ஹே அண்டர்வேர் கோடுதெரிய லுங்கி கட்டுவேன்
நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்
கடலுகட்ட போல நான் சுத்தும் ஆளுடா
தங்க மெடலுபோல உடம்பு குள்ள காயம் நூறுடா
ஆண்: மூ ரெண்டு ஆறுடா
முன்கோப ஆளுடா
அவன நீ முறைச்சாக்கா டார் டார் டார்
ஆண்: ஹே கூவும் நதி ஓரத்துல
ஹே குந்திகின்னு கூவிகினோம்
ஹே சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி ஊத்திகினோம்
—பின்னணி இசை—
ஆண்: ஹேஹே காட்டு புல்லு போல நானும்
தானாகவே முளைச்சவன்
ஆண் குழு: முளைச்சவன்
ஆண்: ஸ்டேட் பேங்குல அக்கௌன்ட் இல்ல
டாஸ்மார்குல கடன் வச்சவன்
ஆண் குழு: வச்சவன்
ஆண்: ஆறபத்தி யாருன்னு ஊர கேளுடா
நான் ஆபத்துல ஊடு கட்டி வாழும் ஆளுடா
கடலுக்குள்ள கிங்குன்னா சுறாமீனுடா
இந்த கரையில தான் கிங்குன்னா ஆறு நானுடா
ஆண்: எல்.ஐ.சி ஹைட்டுடா
நான் வந்தா வெயிட்டுடா
ஃபைட்டுன்னு வந்தாக்கா டார் டார் டார்
ஆண்: ஹே கூவும் நதி ஓரத்துல
ஹே குந்திகின்னு கூவிகினோம்
ஹே சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி ஊத்திகினோம்
ஆண்: சோடா பாட்டில் கையில
சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
ஆண்: வாடா வாடா மாப்புள்ள
வகுத்திருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்




