எங்க புள்ள இருக்க

Yenga Pulla Irukka Lyrics in Tamil
Song Name: Yenga Pulla Irukka
Movie: Kayal(கயல்)
Music: D. Imman
Singer: Balram
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Yenga Pulla Irukka Lyrics in Tamil

ஆண்: எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி

ஆண்: ஒத்தையா வேகுறேன்
மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

ஆண்: எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி

—பின்னணி இசை—

ஆண்: அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி

ஆண்: பொத்தி வச்ச ஓன் நினைப்பு
பொத்துக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

ஆண்: எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி

—பின்னணி இசை—

ஆண்: எனக்கான வரம்போல பிறந்தாயடி
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி

ஆண்: உன்ன இவன் கண்ணுமுழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே
செத்திடவும் தோணுதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

ஆண்: எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி

ஆண்: ஒத்தையா வேகுறேன்
மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team