பாக்காத என்ன பாக்காத

Paakatha Enna Paakatha Lyrics in Tamil
Song Name: Paakatha Enna Paakatha
Movie: Aaru(ஆறு)
Music: Devi Sri Prasad
Singers: Tippu and Sumangali
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)
Year: 2005

Paakatha Enna Paakatha Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

ஆண்: கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல

ஆண்: பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

—பின்னணி இசை—

ஆண்: வேணா வேணாணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்துவிட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டிவிட்ட

ஆண்: நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சிப்புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப்புட்ட

ஆண்: என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்கவிட்ட
உள்ள இருந்த என் உசுர
வெளிய மிதக்கவிட்ட

ஆண்: பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

—பின்னணி இசை—

பெண்: வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்ன வெறுக்கலையே
காணும் காணும்ணு நீ தேட
காதல் ஒன்னும் தொலையலையே

பெண்: ஒன்னா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்

பெண்: பறவையின் சிறகுகள் விரிஞ்சால்தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால்தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

பெண்: பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

பெண்: கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team