Unna Ippo Paakkanum Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: உன்ன இப்போ பாக்கணும்
ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்
பெண்: உறவே மனம் தேம்புதே
உசுர தர ஏங்குதே
ஆண்: நீ எங்கேயும் போகாத
நான் வாரேன் வாடாத
உன்ன இப்போ பாக்கணும்
ஒன்னு பேசனும்
பெண்: என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்
—பின்னணி இசை—
பெண்: இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
பெண்: கண்ணீாிலே காவியம்
தண்ணீாிலே ஓவியம்
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிா் வண்ணங்கள் மாறிடுமோ
பெண்: உன்ன இப்போ பாக்கணும்
ஒன்னு பேசனும்
ஆண்: என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்
—பின்னணி இசை—
ஆண்: இங்கே உடல் அங்கே உயிா்
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
ஆண்: காயும் இருள் நானடி
பாயும் ஒளி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
ஆண்: உன்ன இப்போ பாக்கணும்
ஒன்னு பேசனும்
பெண்: என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்
ஆண்: உறவே மனம் தேம்புதே
பெண்: உசுர தர ஏங்குதே
ஆண்: நீ எங்கேயும் காணாம
எங்கேதான் போனாயோ
பெண்: உன்ன இப்போ பாக்கணும்






