கண்மூடி திறக்கும்போது

Kanmoodi Thirakumbothu Lyrics in Tamil
Song Name: Kanmoodi Thirakumbothu
Movie: Sachein(சச்சின்)
Music: Devi Sri Prasad
Singer: Devi Sri Prasad
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)
Year: 2005

Kanmoodi Thirakumbothu Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே

ஆண்: குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து
இதுதான் காதல் என்றாலே

ஆண்: தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள்தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன்

ஆண்: அழகான விபத்தில் இன்று
ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்

—பின்னணி இசை—

ஆண்: உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா

ஆண்: நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா

ஆண்: உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் எடையை
உணர்கின்றேன் காதல் இதுவா

ஆண்: கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே

—பின்னணி இசை—

ஆண்: வீதி உலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே

ஆண்: நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கதான் மழை குதிக்குமே

ஆண்: பூகம்பம் வந்தால் கூட ஓஹோ
பதறாத நெஞ்சம் எனது ஓஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
பட் என்று சரிந்தது இன்று ஓஓ

ஆண்: கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே

ஆண்: குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team