வா வா வா என் தலைவா

Va Va Va En Thalaiva Lyrics in Tamil
Song Name: Va Va Va En Thalaiva
Movie: Sachein(சச்சின்)
Music: Devi Sri Prasad
Singer: Shankar Mahadevan
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)
Year: 2005

Va Va Va En Thalaiva Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: ஹேய் வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா

ஆண்: வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா

ஆண்: ஒருதடவை ஜெயிப்பதெல்லாம்
சரித்திரம் ஆகாது
தினசரி நீ ஜெயித்துவிடு
திசைகளும் உன்னோடு

ஆண்: அடிபணியாதே வளையாதே
ஏறு ஏறு ஏறு முன்னேறு

ஆண்: ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ

ஆண்: ஹேய் வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா

—பின்னணி இசை—

ஆண்: ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும்
உலகம் ரொம்ப அழகு

ஆண்: ஏய் கடவுளாகவும் வேண்டாம்
மிருகமாகவும் வேண்டாம்
ரசிகனாய் இரு ஒவ்வொன்றோடும்
ரசனையோடு பழகு

ஆண்: ஏய் விடியலுக்கு விண்வெளிதான்
விளம்பரம் செய்யாது
விருதுகளை விலை கொடுத்து வாங்கிடகூடாது

ஆண்: எது முடியாது எது கிடையாது
மோதி மோதி மோதி போராடு

ஆண்: ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ

ஆண்: ஹேய் வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா

—பின்னணி இசை—

ஆண்: வாழ்க்கை இந்த வாழ்க்கை
இதை கவிதை புத்தகம் போல் நேசி
அட கடைசி பக்கம் வரை வாசி

ஆண்: ஹே உலகம் அடடா இந்த உலகம்
இங்கு நிமிடம் நிமிடமாய் சந்தோஷி
மணம் நிறைய நிறைய உல்லாசி

ஆண்: ஹே தங்கமழை கேட்காதே
உழைத்து ஒரு குடை வாங்கு
அட தடைகளுக்கு அஞ்சாதே
உடைத்திட புலியாகு

ஆண்: துளையிட்டால்தான் சுட்டால்தான்
மூங்கில் கூட பாடும் குழலாகும்

ஆண்: ஹே மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ
ஹேய் மாரோ மாரோ கோலி மாரோ
யாரோ யாரோ சிம் யாரோ ஹோய்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team