En Mel Vizhundha Lyrics in Tamil
ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
ஆண்: என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: உடம்பில் உறைகின்ற
ஓர் உயிர் போல்
உனக்குள்தானே நான் இருந்தேன்
ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: மண்ணைத் திறந்தால்
நீர் இருக்கும்
என் மனதைத் திறந்தால்
நீ இருப்பாய்
ஆண்: ஒளியைத் திறந்தால்
இசை இருக்கும்
என் உயிரைத் திறந்தால்
நீ இருப்பாய்
பெண்: வானம் திறந்தால்
மழை இருக்கும்
என் வயதைத் திறந்தால்
நீ இருப்பாய்
ஆண்: இரவைத் திறந்தால்
பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால்
நீ இருப்பாய்
பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
பெண்: மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
ஆண்: உடம்பில் உறைகின்ற
ஓர் உயிர் போல்
உனக்குள்தானே நான் இருந்தேன்
பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


