Manasula Soora Kaathey Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
பெண்: மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
—பின்னணி இசை—
ஆண்: நிலவே சோறூட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே
—பின்னணி இசை—
ஆண்: வாவென்று சொல்லும் முன்னே
வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன்
அறியாத தாய் முகம்
பெண்: ஆஹா ரகசிய யோசனை
கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை
சுட சுட காய்ச்சுதே
ஆண் மற்றும் பெண்: பொல்லாத நெஞ்சில் வந்து
புது ஒளி பாய்ச்சுதே
ஆண்: கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்
—பின்னணி இசை—
ஆண்: ஆனந்தம் பெண்ணாய் வந்தே
அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக்
குயில் போல கூவுதே
பெண்: கை தொடும் போதிலே
கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும்
கருவறை வாசமே
ஆண் மற்றும் பெண்: எப்போதும் என்னில் வீச
மிதந்திடும் பாவமே
ஆண்: மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வான் ஒலி பாடுதே
பெண்: மனசுல சூரக்காத்தே
அடிக்குது காதல் பூத்தே
ஆண்: நிலவே சோறூட்டுதே
கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே
—பின்னணி இசை—

