மார்கழிப் பூவே

Margazhi Poove Lyrics in Tamil
Song Name: Margazhi Poove
Singers: Shobha Shankar and Chorus
Year: 1994

Margazhi Poove Lyrics in Tamil

பெண்: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண்: மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

பெண்: மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

பெண்: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண்: பூக்களைப் பிரித்து
புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால்
முயல் போல் குதிப்பேன்

பெண்: நான் மட்டும் இரவில்
தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில்
தேநீர் குடிப்பேன்

பெண்: வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்

பெண்: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண் குழு: வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

பெண் குழு: வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

பெண்: காவேரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை

பெண்: சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

பெண் குழு: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
பெண்: உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
பெண் குழு: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண் குழு: மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

பெண் குழு: மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

பெண் குழு: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண் குழு: வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

பெண் குழு: வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

பெண் குழு: வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

பெண் குழு: வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team