மகராசி

Singers:
Lyricist:

Magaraasi Lyrics in Tamil

ஆண்: சிரிக்கிற சீனி கட்டி
செல்லம் கொஞ்சி ஆட
இடிக்கிற வானம் வந்து
மத்தளம் தேட

ஆண்: குதிக்கிற காலு ரெண்டும்
தத்தி தத்தி ஓட
அலையிற காத்தும் இங்க
தெம்மாங்கு பாட

ஆண்: வீட்டுக்குள்ள சந்திரனா
பூத்தவளே நீ தான்
வால் முளைச்ச வானவில்லா
வந்தவளும் நீ தான்

ஆண்: என்னோட கண்ணாடி பிம்பம்
இங்க முன்னால
கண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதே
என் மேல

ஆண்: என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி
என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி

ஆண்: குட்டி பசி வந்தா
என்ன பிச்சு எடுப்பா
மல்லு கட்டி நின்னாலே
எட்டி உதைப்பா

ஆண்: ஒத்த நொடி போதும்
இதை எல்லாம் மறப்பா
பெத்தவள போல
என் பக்கம் இருப்பா

ஆண்: என் மடிய ஒரு பஞ்சு மெத்தை ஆக்கி
நாள் முழுக்கா தலை வெச்சு கெடப்பா
கால் விரல அட தொட்டு நெட்டி பறிச்சு
நான் அசர அவ தட்டி கொடுப்பா

ஆண்: என்னோட கண்ணாடி பிம்பம்
இங்க முன்னால
கண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதே
என் மேல

ஆண்: என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி
என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி

ஆண்: சிரிக்கிற சீனி கட்டி
செல்லம் கொஞ்சி ஆட
இடிக்கிற வானம் வந்து
மத்தளம் தேட

ஆண்: குதிக்கிற காலு ரெண்டும்
தத்தி தத்தி ஓட
அலையிற காத்தும் இங்க
தெம்மாங்கு பாட

ஆண்: வீட்டுக்குள்ள சந்திரனா
பூத்தவளே நீ தான்
வால் முளைச்ச வானவில்லா
வந்தவளும் நீ தான்

ஆண்: என்னோட கண்ணாடி பிம்பம்
இங்க முன்னால
கண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதே
என் மேல

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team