மின்னலே நீ வந்ததேனடி

Minnale Nee Vanthathenadi Lyrics in Tamil
Song Name: En Mel Vizhundha
Singer: S. P. Balasubrahmanyam
Year: 1994

Minnale Nee Vanthathenadi Lyrics in Tamil

ஆண்: மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம் என்னடி

ஆண்: சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

ஆண்: மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம் என்னடி

ஆண்: சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

ஆண்: கண் விழித்துப் பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவுச் சின்னமே

ஆண்: கண் விழித்துப் பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவுச் சின்னமே

ஆண்: கதறிக் கதறி எனது உள்ளம்
உடைந்து போனதே
இன்று சிதறிப் போன
சில்லில் எல்லாம் உனது பிம்பமே

ஆண்: கண்ணீரில் தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்

ஆண்: மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம் என்னடி

ஆண்: சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

ஆண்: பால் மழைக்குக் காத்திருக்கும்
பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்
சாமி இல்லையா

ஆண்: பால் மழைக்குக் காத்திருக்கும்
பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்
சாமி இல்லையா

ஆண்: வார்த்தை வரக் காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும்
நீளும் இல்லையா

ஆண்: கண்ணீரில் தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்

ஆண்: மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம் என்னடி

ஆண்: சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team