Ulla Olicha Uyire Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: உள்ள ஒளிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ
எங்க மனசில் எழுதி வச்சோம் அழியாதிரு நீ
நெஞ்சம் சோர்வடைஞ்சபோது ஒரு துணையா வந்த ஒளி
கண்ணில் நீர் வடிஞ்சபோது சிறுதுனியா வந்த வரம் நீ
ஆண்: ஓ சின்ன நம்பிக்கை ஊட்ட இந்த உலகம் சொல்லும் கதை நீ
அந்த கதையின் வீர அவதரிச்சு வந்த நிஜம் நீ
மக்கள் மனச ஆழ வந்து பிறந்த தமிழ் மகன் நீ
ஆண்: உள்ள ஒளிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ
—பின்னணி இசை—
ஆண்: நீயும் கொடுத்த சிரிப்பும் இப்போ தனியா கிடக்கு
ராசா அமர்ந்த சிம்மாசனம் தனியா கிடக்கு
உன்ன பார்த்து எழும் கூச்சல் அது தனியா இப்போ கிடக்கு
ஓஓஓ தெரியாட்டமிடும் கால்கள் அது தனியா இப்ப கிடக்கு
ஆண்: ஏ உன்ன ரசிச்ச கூட்டம் அது தனியா இப்ப கிடக்கு
நேரம் புகழ்ந்த காத்தும் அட தனியா இப்ப கிடக்கு
அண்ணன் கொடுத்த நேசம் அது நிறைவா நெஞ்சில் இருக்கு
ஆண்: உள்ள ஒளிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ
எங்க மனசில் எழுதி வச்சோம் அழியாதிரு நீ
—பின்னணி இசை—





