என் இதயம்

En Idhayam Lyrics in Tamil
Song Name: En Idhayam
Movie: Singam(சிங்கம்)
Music: Devi Sri Prasad
Singers: Suchitra and Tippu
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)
Year: 2010

En Idhayam Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்: என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

பெண்: இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

பெண்: என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

—பின்னணி இசை—

பெண்: கூட்டத்தில் நின்றாலும்
உன்னையே தேடும் கண்கள்
ஒற்றையாய் போனாலும்
உன்னுடன் நடக்குது கால்கள்

பெண்: அச்சமே இல்லாத
பேச்சிலே மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல்
உன்னிடம் வந்தேன் தஞ்சம்

ஆண்: தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறு அடி இழுத்தாய்

பெண்: என் இதயம்
இதயம் இதயம் இதயம் இதயம்
இதயம் இதயம் இதயம்

பெண்: என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

—பின்னணி இசை—

பெண்: உன்னிடம் எப்போதும் உரிமையாய்
பழகிட வேண்டும் பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும் தினம் தினம்
தொலைத்திட தூண்டும்

பெண்: இதுவரை என் நெஞ்சில்
இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே
மிரட்டுதே உந்தன் குணங்கள்

ஆண்: இத்தனை நாட்களாய்
படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே
உன்னைக்கண்டு விழித்தேன்

பெண்: என் இதயம் என் இதயம்

பெண்: என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

பெண்: பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team