ஆகாசத்த நான் பாக்குறேன்

Music: Santhosh Narayanan
Singers: Kalyani Nair and Pradeep Kumar
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Agasatha Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

பெண்: கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே

—பின்னணி இசை—

பெண் மற்றும் ஆண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

—பின்னணி இசை—

ஆண்: ஊரு கண்ணே படும்படி
உறவாடும் கனவே தொடருதே

பெண்: நெனவாகும் கனவே அருகிலே
உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே

ஆண்: மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வரங்களே

பெண்: தமிழே தமிழே வருவேனே உன் கரமா
ஆண்: கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா

ஆண் மற்றும் பெண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

—பின்னணி இசை—

பெண்: காம்பத் தேடும் குழந்தையா
உன்னத் தேடும் உசுரு பசியில

ஆண்: கோடி பேரில் உன்ன மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில

பெண்: பேரன்பு போல ஏதுமில்ல
நீ போதும் நானும் ஏழையில்ல

பெண்: அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
ஆண்: அழகி அழகி இது போதும் வாழ்நாளில்

ஆண் மற்றும் பெண்: ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

பெண்: கண்ணால எதையும் காணாத இவதான்
கண்ணீரப் பாா்த்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக
உன்னால பாா்ப்பேனே

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team