மன்றம் வந்த தென்றலுக்கு

Mandram Vandha Lyrics in Tamil
Movie: Mouna Ragam(மௌன ராகம்)
Music: Ilaiyaraaja
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali(வாலி)

Mandram Vandha Lyrics in Tamil

ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண்: தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே

ஆண்: பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண்: மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல

ஆண்: விண்ணோடுதான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண்: தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே

ஆண்: பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண்: தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன

ஆண்: சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண்: தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே

ஆண்: பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

ஆண்: மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

Other Songs From Mouna Ragam Album

Lyrics Added by Padalvarigal Team