Movie: Mouna Ragam(மௌன ராகம்)
Music: Ilaiyaraaja
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali(வாலி)
Nilaave Vaa Lyrics in Tamil
ஆண்: நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்
ஆண்: நிலாவே வா
செல்லாதே வா
ஆண்: காவேரியா கானல் நீரா
பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
ஆண்: அம்மாடியோ நீ தான்
இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம்
நீயும் சொன்ன சொல்லை
ஆண்: பூந்தேனே நீ தானே
சொல்லில் வைத்தாய் முள்ளை
ஆண்: நிலாவே வா
செல்லாதே வா
ஆண்: பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட
சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது
மண்ணின் மீது
ஆண்: ஒரே ஒரு பார்வை
தந்தால் என்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் என்ன மானே
ஆண்: ஆகாயம் தாங்காத
மேகம் ஏது கண்ணே
ஆண்: நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்
ஆண்: நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
