புடிச்சிருக்கு

Pudichirukku Lyrics in Tamil
Song Name: Pudichirukku
Music: Harris Jayaraj
Singers: Hariharan, Komal Ramesh and Mahathi
Year: 2003

Pudichirukku Lyrics in Tamil

பெண்: அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

ஆண்: துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு

பெண்: புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தொியல

பெண்: அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

ஆண்: வள்ளுவாின் குறளாய்
ரெண்டு வாி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு

பெண்: காதல் மடல் அருகே
உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு

ஆண்: உன் மடிசாா் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
பெண்: தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு

பெண்: அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
ஆண்: உனக்கு என்னை புடிச்சிருக்கு
பெண்: என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
ஆண்: எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

ஆண்: காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில்
ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்

பெண்: காதலிலே விழுந்தால்
கட்டபொம்மன் கூட
போா்களத்தில் பூக்கள் பறிப்பான்

ஆண்: காலையும் மாலையும் படிக்கும் உன்னை
இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்
பெண்: காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

ஆண்: அடடா அடடா அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு

ஆண்: துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு

பெண்: புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team