Idhudhaanaa Idhudhaanaa Lyrics in Tamil
பெண்: இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பெண்: பகலிலும் நான் கண்ட
கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
பெண்: திருமண நாள் எண்ணி
நகா்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
பெண்: இதழ் பிாிக்காமல்
குரல் எழுப்பாமல்
நான் எனக்கான
ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
பெண்: இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பெண்: இனிமேல் வீட்டில்
தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
பெண்: ஒளிந்திடும் எனையே
உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
பெண்: மாடியின் வளைவினில்
என்னை கண்டு பிடிப்பாய்
பாா்க்காதவன் போல்
சிறப்பாய் நடிப்பாய்
பெண்: திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
பெண்: இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பெண்: ஞாயிறு மதியம்
சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
பெண்: வேடிக்கை பாா் என
என்னை அமா்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
பெண்: ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சினுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவாின் உலகமும் இருவாி சுருங்க
பெண்: மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலா்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளா்ந்திடுமே
பெண்: மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பகலிலும் நான் கண்ட
கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
பெண்: திருமண நாள் எண்ணி
நகா்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
பெண்: இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான
ஒரு பாடல் பாடிக்கொள்வேன்



