Vaarayo Vaarayo Lyrics in Tamil
பெண்: வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
ஆண்: வாராயோ வாராயோ மோனலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
பெண்: இங்கே இங்கே
ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
ஆண்: பூவே பூவே
நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
பெண்: ஹோ ஹோ ஹோ
லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆண்: உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
பெண்: வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே
ஆண்: நீயே நீயே
அந்த ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெண்: தீயே தீயே
நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
ஆண்: நீ நீ நீ நீ
மை ஃபேர் லேடி
வா வா வா வா
என் காதல் ஜோடி
பெண்: நான் முதன் முதலாய்
எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
ஆண்: வாராயோ வாராயோ மோனலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் ராசா
ஆண் மற்றும் பெண்: என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
ஆண்: என்னோடு வா தினமே


