Paasamulla Paandiyare Lyrics in Tamil
பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பெண் குழு: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பெண்: நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நா சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்பட்டு
பெண் குழு: நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நா சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்பட்டு
ஆண்: ஏய் கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள
உள்ளூர ஊறுதடி தேன்போல
பெண் குழு: கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள
உள்ளூர ஊறுதடி தேன்போல
பெண்: முத்தாரம்தான் வித்தாராம்தான்
ஆண்: அரே அஹ்ஹா ஆஆஆஆ
பெண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
ஆண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
ஆண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பெண்: கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
ஆண்: கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
பெண்: கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
ஆண்: கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
பெண்: கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
ஆண்: கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து
பெண்: வளந்து வளந்து வளந்ததிடாம
புதிய பாட்டு பாட சொல்லி
ஆண்: கெரங்கி கெரங்கி கெரங்கிடாம
விடியும் போது கேக்க சொல்
ஆண்: படிச்ச பாட்ட கேட்டதாறு
படிக்கும் போது பாத்தாரு
பெண்: ஹோய்ஹோய்ஹோய்
ஹோய்ஹோய் ஹோய்
ஆண்: கட்டழகு பெட்டகமே
பொட்டு வச்ச ரத்தினமே
நித்திரையா விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
பெண் குழு: கட்டழகு பெட்டகமே
பொட்டு வச்ச ரத்தினமே
நித்திரையா விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
பெண்: கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
பெண் குழு: கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள
நிக்காம கனவு வரும் உன்னால
ஆண்: கல்யாணம்தான் நன்நேரம்தான்
பெண்: அரே அஹ்ஹா ஆஆஆஆ
ஆண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
ஆண்: பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
பெண்: கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
ஆண் மற்றும் பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
ஆண் மற்றும் பெண்: தந்தன நா தந்தன நா
தந்தன நா தந்தன நா
