குருவாயூரப்பா

Guruvayurappa Lyrics in Tamil
Music: Ilaiyaraaja
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Guruvayurappa Lyrics in Tamil

ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ஆண்: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை

ஆண்: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆண்: தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

பெண்: தினம் தோறும் இரவில்
நடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆண்: அரங்கேற்றம்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன்தான்

பெண்: வா வா என் தேவா செம்பூவா
என் தேகம் சேராதோ உன் கைகளிலே

ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண்: ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க

ஆண்: எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க

பெண்: பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

ஆண்: மாது உன் மீது இப்போது
என் மோகம் பாயாதோ சொல் பூங்குயிலே

ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ஆண்: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை

பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆண்: நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team