கேளடி கண்மணி

Keladi Kanmani Lyrics in Tamil
Music: Ilaiyaraaja
Singer: S. P. Balasubrahmanyam

Keladi Kanmani Lyrics in Tamil

ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

ஆண்: நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி

ஆண்: எந்நாளும்தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

ஆண்: கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

ஆண்: நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா

ஆண்: ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team