ஈச்சி எலுமிச்சி

Music: A. R. Rahman
Singers: Manoj Bharathiraja, B. Arundhathi, Raqueeb Alam and Parthasarathy

Eechi Elemichi Lyrics in Tamil

ஆண்: மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ

பெண்: மாயோ மாயோ மாயோ யோ யோ
மாயோ மாயோ மாயோ யோ யோ
மாயோ மாயோ மாயோ யோ யோ
மாயோ மாயோ யோ யோ

ஆண்: ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண்: தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண்: ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண்: தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண்: ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

பெண்: மாயோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
மாயோஓஒ ஓஒ ஓஒ ஓஒ

பெண்: ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
ஆண்: சிறுதண்ணி தோளோடும் மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே

ஆண்: ஒத்த மழத்துளி பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பெண்: பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

ஆண்: மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
பெண்: பாட்டு சத்தம் கேக்கலையே
அந்தி பகல் ஏதும் பாக்கலையே

ஆண்: மஞ்ச கிழங்கே ஒன்ன பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
பெண்: நெஞ்சு குழிகுள்ள வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

ஆண்: ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண்: தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண்: ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண்: தொழுவோடு சேராத பொலிகாள கூட
கொடைய பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாளி காள
தாவணி பாத்து மெரளும்

ஆண்: பாசி மணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீய வச்சு போனவளே

ஆண்: தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டைய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி

ஆண்: கையில் கைய வச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஆண்: ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண்: தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண்: ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண்: மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ
மாயே மாயே யோ

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team