குளிருது குளிருது

Kulirudhu Kulirudhu Lyrics in Tamil
Music: A. R. Rahman
Singers: Unni Krishnan and Swarnalatha

Kulirudhu Kulirudhu Lyrics in Tamil

ஆண்: குளிருது குளிருது இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

ஆண்: கடல் அலை தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள் எரிவதில்லை

ஆண் மற்றும் பெண்: குளிருது குளிருது இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
பெண்: நகருது நகருது ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

ஆண்: இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு
பெண்: நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு
இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

ஆண்: இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

பெண்: தேகங்கள் பரிமாற
நம் உள்ளங்கள் இடம் மாறும்
ஆண்: பேரின்ப பூஜைகளே
உன் பெண்மைக்கு பரிகாரம்

பெண்: மழை இல்லாமலும்
தென்றல் சொல்லாமலும்
ஆண் மற்றும் பெண்: நம் நெஞ்சுக்குள் இப்போது
லட்சம் பூ மலரும்

ஆண்: குளிருது குளிருது இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

ஆண்: நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
பெண்: முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

ஆண்: மழைத் துளி மழை துளி தொல்லையா
அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா

பெண்: சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது ஏது

ஆண்: அடி பூகம்ப வேலையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்
பெண்: தேகத்தை அணைத்து விடு
சுடும் தீ கூட அணைந்துவிடும்

பெண்: அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
ஆண்: சுற்றி நின்றாலும் தீவண்ணம்
அணைவது தின்னம்

ஆண் மற்றும் பெண்: குளிருது குளிருது இரு உயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

ஆண் மற்றும் பெண்: கடல் அலை தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள் எரிவதில்லை

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team