சொட்ட சொட்ட (பெண்)

Music: A. R. Rahman
Singer: Sujatha Mohan

Chotta Chotta (Female) Lyrics in Tamil

பெண்: அடி நீ இங்கே
அடி நீயிங்கே

பெண்: நீ இங்கே நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே

பெண்: இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும் வருவானா
இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும் வருவானா

பெண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

பெண்: அடி நீ இங்கே அடி நீயிங்கே
நீ இங்கே நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே

பெண்:
இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கிதான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கிதான்
சொந்தச்சேலை தருவானே

பெண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

பெண்: அடி நீ இங்கே அடி நீயிங்கே
நீ இங்கே நீ இங்கே

பெண்: உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்

பெண்: உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்

பெண்: வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு

பெண்: நீ எனக்குள் புதையல் எடுக்க
நானும் உனக்குள் புதையல் எடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு

பெண்: இளமையின் தேவை எது எது என்று
அறிந்தவன் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்லவா

பெண்: சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

பெண்: அடி நீ இங்கே அடி நீயிங்கே
நீ இங்கே நீ இங்கே

பெண்: இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கிதான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கிதான்
சொந்தச்சேலை தருவானே

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team