செஞ்சுடரே

Senjudare Lyrics in Tamil

ஆண்: செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே
என்னை சீராக்கி சேர்ப்பாயோ
செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே
என்னை சீராக்கி சேர்ப்பாயோ

ஆண்: கார்குழலே உன் கண்களும் கதை சொல்லி
கரை சேரவே கொண்டு போவாயோ
ஒரு போதும் நான் உறங்க உனை நீங்கா நிலை வர
வரம் வேண்டும் வரம் வேண்டுமே

ஆண்: உன் திருவூடல் தாண்டி வர
அண்ணாமலை சுற்றும்
பிறை சூடும் சிவனுக்கு அரோகரா

ஆண்: தன் மறுவூடல் அரங்கேற
அலங்காரம் எழுந்து வரும்
ஈசனுக்கு அரோகரா

ஆண்: வாநாதனே என் துன்பங்களைத் தீக்க
வாசலில் உனை காணக் காத்திருக்கேன்
வா அன்பனே என் இன்பங்களும் நிறைய
இந்த நொடியிலே நான் வாழவே உனை காணணுமே
உனை காணணுமே உனை காணணுமே
உனை காணணுமே உனை காணணுமே

ஆண்: அரோகரா அப்பனே ஐந்தனே
அரோகரா அப்பனே வேந்தனே
அரோகரா பித்தனே அப்பனே
அரோகரா அரோகரா

ஆண்: அரோகரா அப்பனே ஐந்தனே
அரோகரா அப்பனே வேந்தனே
அரோகரா பித்தனே அப்பனே
அரோகரா அரோகரா

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team