சரசர சாரக்காத்து

Sara Sara Saara Kathu Lyrics in Tamil From Vaagai Sooda Vaa(2011) Movie song composed by Ghibran and sung by Chinmayi. The Sara Sara Saara Kathu Song Lyrics are penned by Vairamuthu. சரசர சாரக்காத்து பாடல் வரிகள்.

Movie: Vaagai Sooda Vaa(வாகை சூட வா)
Music: Ghibran
Singer: Chinmayi
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Sara Sara Saara Kathu Lyrics in Tamil

பெண்: சரசர சாரக்காத்து வீசும்போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே

பெண்: சரசர சாரக்காத்து வீசும்போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே

பெண்: இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட

பெண்: இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட

பெண்: டீ போல நீ
என்னை ஏன் ஆத்துற

பெண்: சரசர சாரக்காத்து வீசும்போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே

பெண்: எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா

பெண்: முட்டக்கோழி புடிக்கவா
மூணு படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில் என்ன கொஞ்ச நினைக்கவா

பெண்: கம்மஞ்சோறு ருசிக்கவா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா

பெண்: மொடக்கத்த ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவக் காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் நிக்கிறேன்
மண்டு நீ கங்கம் ஏன் கேக்குற

பெண்: சரசர சாரக்காத்து வீசும்போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே

பெண்: புல்லு கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல
கையெழுத்து போடுற கன்னிப்பொண்ணு மார்புல

பெண்: மூணு நாளா பாக்கல
ஊரில் எந்த பூவும் பூக்கல

பெண்: ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்துதான் கிறங்கி போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

பெண்: சரசர சாரக்காத்து வீசும்போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே

பெண்: சரசர சாரக்காத்து வீசும்போது
சார பாத்து பேசும்போது
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே

பெண்: இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட

பெண்: இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதித்தாரேன் மூச்சு உட்பட

பெண்: டீ போல நீ
என்னை ஏன் ஆத்துற

பெண்: காட்டு மல்லிகை பூத்திருக்குது
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா

Other Songs From Vaagai Sooda Vaa Album