போறானே போறானே

Poraney Poraney Lyrics in Tamil From Vaagai Sooda Vaa(2011) Movie song composed by Ghibran and sung by Neha Bhasin and Ranjith. The Poraney Poraney Song Lyrics are penned by Karthik Netha. போறானே போறானே பாடல் வரிகள்.

Movie: Vaagai Sooda Vaa(வாகை சூட வா)
Music: Ghibran
Singers: Neha Bhasin and Ranjith
Lyricist: Karthik Netha(கார்த்திக் நேத்தா)

Poraney Poraney Lyrics in Tamil

பெண்: போறானே போறானே

பெண்: போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

பெண்: அழகாய் நீ நிறைஞ்ச
அடடா பொந்துக்குள் புவியல் போல

ஆண்: போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பெண்: பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்

ஆண்: மழையில் நனைஞ்ச காத்த போல
மனச நீயும் நனைச்சுப்புட்ட

பெண்: ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாயா
உன்ன மனச கொஞ்சம் புனைய வாயா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா

ஆண்: அட நெல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பாத்துகிருச்சே
சின்ன சின்ன கொறத்தி பொன்னு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காய ஆஞ்சிருச்சே

பெண்: போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

ஆண்: கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட

பெண்: உன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்

ஆண்: மூக்கான கவுனப் போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

பெண்: அடகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு

ஆண்: அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்

ஆண்: போறாளே போறாளே
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பெண்: அழகாய் நீ நிறைஞ்ச
அடடா பொந்துக்குள் புவியல் போல

பெண்: போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

Other Songs From Vaagai Sooda Vaa Album