Onnapola Oruthana Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
பெண்: சாமி போல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
பெண்: என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும்
சொந்தம் நீதானே
பெண்: உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
—பின்னணி இசை—
பெண்: உன்ன எதிர்பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
பெண்: ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை கடந்ததுதானே
பெண்: உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
—பின்னணி இசை—
பெண்: உன்னுடைய சாலையில் நின்று மலா் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை யாவும் உந்தன் அன்பிலே
பெண்: என்னை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே
பெண்: உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
பெண்: சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
பெண்: என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும்
சொந்தம் நீதானே
—பின்னணி இசை—