எங்கிருந்தாய்

Engirundhai Lyrics in Tamil
Song Name: Engirundhai
Movie: Winner(வின்னர்)
Music: Yuvan Shankar Raja
Singer: Harish Raghavendra
Year: 2003

Engirundhai Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது

ஆண்: எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்

ஆண்: இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

—பின்னணி இசை—

ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது

—பின்னணி இசை—

ஆண்: நிலவின் பின்புறமாய்
நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில்
ஒளிந்தே இருந்தாயா

ஆண்: கடலின் அடியில்
படிந்தா இருந்தாய்
மலையின் மடியில்
தவழ்ந்தா கிடந்தாய்

ஆண்: இந்த உலகின் அழகெங்கும்
நீதானா வழிந்தோடினாய்

ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது

—பின்னணி இசை—

ஆண்: இதழை சுளிக்காதே
இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே
இடிந்தே நான் சாய்வேன்

ஆண்: அடியே சிரிக்காதே
இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே
அழுதே விடுவேன்

ஆண்: ஒரு ஊசி முனை வழியே
உயிரை நீ வெளியேற்றினாய்

ஆண்: எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது

ஆண்: எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்

ஆண்: இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team