வெள்ளி மலரே

Velli Malarae Lyrics in Tamil
Music: A. R. Rahman
Singers: S. P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer

Velli Malarae Lyrics in Tamil

பெண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே

பெண்: நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண்: இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு

ஆண்: இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு

ஆண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஆண்: மின்னொளியில் மலா்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலா்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்

பெண்: ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பாா்ப்பீா்
ஐயோ தள்ளி நில் நில்

ஆண்: வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே

பெண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே

பெண்: வனங்களில் பூந்தளிா் தேடும் போதும்
நதிகளில் நீா்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்

ஆண்: தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச் செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச் சொல் சொல்

பெண்: மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான்

ஆண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே

பெண்: நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண்: இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team