Kai Thatti Thatti Lyrics in Tamil
ஆண்: கை தட்டி தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே
ஆண் குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின் பின்பம்
ஆண்: ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
ஆண் குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
ஆண்: ரத்தினத்து தேர் ஆனாள்
என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானாள்
என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனாள்
ஆண்: என் நெஞ்ச குளத்தில்
பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்கும் முன்
நெஞ்சத்தில் குதித்தாள்
ஆண்: விழியால் நெஞ்சுடைத்து விட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்
ஆண் குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின் பின்பம்
ஆண்: ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
ஆண் குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
ஆண் குழு: தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் தர ரம் பம்பம்பம்
பம்பம்பம் தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம்
ஆண்: பால்வண்ண நிலவெடுத்து
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ
ஆண்: என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகை தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரை தத்தரித்தவளோ
ஆண் குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின் பின்பம்
ஆண்: ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
ஆண் குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்.


