Kadhal Kaditham Lyrics in Tamil
பெண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்
பெண்: சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்
ஆண்: சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
பெண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்
பெண்: கடிதத்தின் வாா்த்தைகளில்
கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
ஆண்: பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
பெண்: அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
பெண்: ஹோ வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்
ஆண்: கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும் போது
சினுங்க மாட்டேனா
பெண்: காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்
போதும் உறங்கமாட்டாயா
ஆண்: தப்பு செய்யப் பாா்த்தால்
ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா
பெண்: ல லா ல லா ல லா .
ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
பெண்: ல லா ல லா ல லா .
ஆண்: ஓ வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்
ஆண்: சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்
ஆண் மற்றும் பெண்: இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்
ஆண்: காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
பெண்: ஓ வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்



