வா சாமி

Song Name: Vaa Saamy
Movie: Annaatthe(அண்ணாத்த)
Music: D. Imman
Singers: Mukesh Mohamed, Nochipatti Thirumoorthy and Keezhakkarai Samsudheen
Lyricist: Arun Bharathi(அருண் பாரதி)
Year: 2021

Vaa Saamy Lyrics in Tamil

ஆண்: சாட்ட எடுத்துகிட்டு
வேட்டி மடிச்சிக்கிட்டு
எதிரிய எருவென
எரி எரி எரிடா

ஆண்: கன்னங் கருப்பிருட்டு
கடுவாய் புலிவெரட்டு
கயவரின் கதையினை
முடி முடி முடிடா

ஆண் குழு: போடு போடு

ஆண்: வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலைநடுங்க
ஆண் குழு: வா சாமி வா சாமி

ஆண்: கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
ஆண் குழு: வா சாமி வா சாமி

ஆண்: திமுதிமு குதிரைகள் திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே
கரு கரு தருமத்தின் தலைவனிடம்
உன் ஆட்டங்கள் முடிகிறதே

ஆண்: மீசைய பாரு
ஆண் குழு: கெடா கெடா
ஆண்: மிருகத்த அழிக்க
ஆண் குழு: வர்றானடா

ஆண்: குருதியக் குடிப்பான்
ஆண் குழு: மொடா மொடா
ஆண்: கொடியவர் கூட்டம்
ஆண் குழு: ஒடுங்கடா

ஆண்: வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலைநடுங்க
ஆண் குழு: வா சாமி வா சாமி

ஆண்: கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க

—பின்னணி இசை—

ஆண் குழு: மொகன மொகன

ஆண்: வெள்ள குதிரயில வேட்ட தொடங்கையில
நரிகளின் நரித்தனம்
ஆண் குழு: ஒடு ஒடு ஒடுங்கும்

ஆண்: வேங்க திமிறையில வேகம் எடுக்கையில
பகைவனின் தொடைகளும்
ஆண் குழு: நடு நடு நடுங்கும்

—பின்னணி இசை—

ஆண் குழு: வா சாமி வா சாமி

—பின்னணி இசை—

ஆண் குழு: வா சாமி வா சாமி

—பின்னணி இசை—

ஆண்: உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி ஊரக் காக்க
ஆண் குழு: வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆண்: சந்ததிய காத்து நிக்க
சங்கடங்கள் தீத்து வைக்க
பாவக் கணக்க தீத்துக் கட்ட
ஆண் குழு: வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆண்: நெருப்புக் கண்ணில் எரியுதடா
எதுத்து நிக்க யாரு
நெருங்கி வரும் வினைகளெல்லாம்
தவிடு பொடியாக்கு

ஆண்: மீசையப் பாரு
ஆண் குழு: கெடா கெடா
ஆண்: மிருகத்தை அழிக்க
ஆண் குழு: வர்றானடா

ஆண்: குருதியக் குடிப்பான்
ஆண் குழு: மொடா மொடா
ஆண்: கொடியவர் கூட்டம்
ஆண் குழு: ஓடுங்கடா

ஆண்: வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகை கொலை நடுங்க
ஆண் குழு: வா சாமி வா சாமி

ஆண்: கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க
ஆண் குழு: வா சாமி வா சாமி

ஆண்: அடி அடி இடியென தரதெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே
பிட பிட பிடரியை இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே

ஆண்: சலங்கைகள் ஆடுது
ஆண் குழு: சடா சடா
ஆண்: சடையினில் இறுக்கிட
ஆண் குழு: வர்றானடா

ஆண்: உடுக்கையின் ஓசை
ஆண் குழு: விடா விடா
ஆண்: உருமிய ஓங்கி
ஆண் குழு: அடிங்கடா

ஆண்: மீசையை பாரு
ஆண் குழு: கெடா கெடா
ஆண்: மிருகத்தை அழிக்க
ஆண் குழு: வர்றானடா

ஆண்: குருதியை குடிப்பான்
ஆண் குழு: மொடா மொடா
ஆண்: கொடியவர் கூட்டம்
ஆண் குழு: ஓடுங்கடா

ஆண் குழு: வா சாமி

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team