Saara Kaatrae Lyrics in Tamil
பெண்: சார சார காற்றே
சார சார காற்றே
—பின்னணி இசை—
பெண்: சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
ஆண்: சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே
பெண்: சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே என் ஆயுள் ரேகையே
ஆண்: படபடன்னு கைரெண்டும் சீராட்ட
விழுகிறதே நம் தோளில் மாலையே
பெண்: பச்சை மனது பால் நிறம்
அன்பில் சிவந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே
ஆண்: தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே தானே தானா
ஆண்: தானே தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே நான நா
ஆண்: ஹே ஏ தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே தானே தானா
ஆண்: தானே தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே நான நா
பெண்: ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
ஆண்: சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே ஹே ஏ
—பின்னணி இசை—
பெண்: யாழிசையும் ஏழிசையும் உன் குரலோ ஓஓ ஓ
நீ நெருங்க பார்ப்பதுதான் சொர்க்கங்களோ ஓ
ஆண்: தெய்வம் மறந்து கொடுத்திடாத
வரம் எத்தனை கோடியோ
அள்ளி கொடுக்க துணிந்த காதல்
அதை சொல்வது நீதியோ
பெண்: சித்தம் உனையெண்ணி சடுகுடு விளையாடுதே
புத்தம் புது வெட்கம் புகுந்திட நடை மாறுதே
ஆண்: அந்தி பகலை மறந்து உறவு நீள
அன்பே நீ வந்தாயே
பெண்: சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
ஆண்: சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே
பெண்: சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற
உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே
ஆண்: குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட
அடைமழையில் என் ஆசை மூழ்குதே
பெண்: லட்சம் பறவை போல
என் உள்ளம் மிதந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே
ஆண்: தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே தானே தானா
ஆண்: தானே தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே நான நா
ஆண்: ஹே ஏ தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே தானே தானா
ஆண்: தானே தின்தாக் தகின
தின்தாக் தகின
தானே நான நா
பெண்: ஓ சார சார காற்றே




