மருதாணி செவப்பு

Song Name: Marudhaani Sevappu
Movie: Annaatthe(அண்ணாத்த)
Music: D. Imman
Singers: D. Imman, Vandana Srinivasan, Nakash Aziz, Anthony Daasan
Lyricist: Mani Amuthavan(மணி அமுதவன்)
Year: 2021

Marudhaani Sevappu Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்: மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டுவாரான்

பெண்: மீனா மினுங்கையில
மின்னி சிணுங்கயில
மேளங்கொட்டப்போறான்

ஆண்: ஹேய் மலந்து மலந்து அனிச்சங்கொழுந்து
மணமணக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட

ஆண்: வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

பெண்: அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா வளையோசை

ஆண்: மருதாணி செவப்பு செவப்பு
மகாராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு

—பின்னணி இசை—

ஆண் மற்றும் பெண் குழு: பொம்மி நடந்துவாரா
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூடப் போறா

ஆண் மற்றும் பெண் குழு: அம்மி மிதிக்கப்போறா
அன்ப விதைக்கப்போறா
தாயி வீட்டுச் சீரா

ஆண்: ஹேய் தவுல அடிக்க நாயனம் ஒலிக்க
நேரம் நெருங்குதடி
அட்சத அட்சத உன்மேல தூவ

ஆண்: வெரல புடிக்க விரதம் முடிக்க
வாரந்தெரிஞ்சிக்கடி
அங்கன இங்கன நீத்துள்ளி தாவ

பெண்: அக்கறஅக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி

ஆண் மற்றும் பெண் குழு: மருதாணி செவப்பு செவப்பு
மகாராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு

—பின்னணி இசை—

ஆண்: மண்ணுதான் விதை ஒன்னுதான்
அது நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்டை ஏத்தி காட்டுமே

ஆண் குழு: நெட்டையில்ல குட்டையில்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக

ஆண்: யாரு பெருசுன்னு எண்ணாத விட்டுத்தள்ளு
வண்ணம் இணைஞ்சு நின்னாதான் வானவில்லு

ஆண்: ஆணும் பொண்ணும் ஒன்னுக்கொன்னு
சேர்ந்து வாழ வேணும் கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு

ஆண் மற்றும் பெண் குழு: மருதாணி செவப்பு செவப்பு
மகாராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு

—பின்னணி இசை—

ஆண் மற்றும் பெண் குழு: மருதாணி செவப்பு செவப்பு
மகாராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team