உசுரே உசுரே

Usure Usure Lyrics in Tamil
Music: D. Imman
Singer: Ananya Bhat

Usure Usure Lyrics in Tamil

பெண்: உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

பெண்: அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நனஞ்ச விறகா கெடக்கேன்

பெண்: திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்

பெண்: சிலந்தி கூடா
செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா

பெண்: உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

பெண்: குழந்தைய போல மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன்கையால் சோறூட்டுவ

பெண்: பசியே இல்லனு பலவாட்டி சொல்ல
ஒழுங்கா திண்ணுன்னு குணம் காட்டுவ
புடவ பொட்டுனு எதையும் கேட்காம
புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ

பெண்: குலசாமி தந்திட்ட பூவ
வணங்காமா வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ
நீதான் தேவ

பெண்: உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

பெண்: இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூ சூடல
விடிஞ்ச பின்னாலும் ஒரங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல

பெண்: உன்ன நான் நெஞ்சுக்குள் அடக்காத்து வச்சேன்
அத நீ பொய்யின்னா மனம் தாங்கல
உலகே கண் வைக்கும் உறவான உன்ன
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல

பெண்: விதியால செம்பெங்கி மால
வெளங்காம இன்னைக்கு கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல

பெண்: உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

பெண்: அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நனஞ்ச விறகா கெடக்கேன்

பெண்: திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்

பெண்: சிலந்தி கூடா
செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா

பெண்: உசுரே உசுரே

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team