Karuva Karuva Payale Lyrics in Tamil
பெண்: கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
ஆண்: வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம
பெண்: என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா
ஆண்: இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
பெண்: நெருப்பா என ஆக்குறியே செவப்பா
பெண்: கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
ஆண்: ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம
ஆண்: வெளஞ்ச காட்ட
வெறிக்கும் மாட்ட
விரட்ட நெனெச்சா
பாயும் உன்மேல
பெண்: கொதிக்கும் சூட்ட
நெதைக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன்
ஆட்டாத வால
ஆண்: விஷ காத்தா
மோதாத மூச்சோட
பெண்: வெறி ஏற
வாரேனே கூத்தாட
ஆண்: வெட கோழி ருசி ஏத்தி
விருந்து போடேண்டி நா சாப்பிட
பெண்: கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
பெண்: அடுக்கு பாண
முறுக்கு போல
எனையும் நொறுக்க
நேரம் பாக்காத
ஆண்: அலுப்பு தீர
அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா
ஊர கூட்டாத
பெண்: கருப்பா வா
பேசாத வாய்யால
ஆண்: அடி போடி
பாப்பேண்டீ ஊடால
பெண்: பொலிகாளை உனைநானே
அடக்க போறேனே மாராப்புல
பெண்: கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
ஆண்: ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம
பெண்: என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா
ஆண்: இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
பெண்: நெருப்பா என ஆக்குறியே செவப்பா
செவப்பா செவப்பா




