Olaga Vaayaadi Lyrics in Tamil
ஆண்: உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஆண்: உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு
என்னாத்துக்கு பூச்சாண்டி
ஆண்: மஹாராணியா இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே
முழுசா நீ மாற வேணும்
ஆண்: வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய்
ஆண்: உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஆண்: அடியே உலக வாயாடி
ஆண்: உலய்ய வச்சு சோறும் ஆக்காம
பொழுதண்ணிக்கும் வேல பாக்காம
தெருவ சுத்தி வர திமிறால
ஒடிபேண்டி உன்கால ஆஆ
ஆண்: சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா
அத என்னணானு பேசும் ஊரு
ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே
தனி ஆளா நீ ஆவ பாரு
ஆண்: எது நல்லது கெட்டது தெரிஞ்சி
அத செய்யணும் பொம்பள புரிஞ்சி
விளையாட நெனெச்சாலே வினையாகி போகுமே
ஆண்: உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி அடியே
ஆண்: வளவி சத்தம் கோயில் பாட்டாக
கொலுசு சத்தம் காதல் சீட்டாக
உசுர வந்து மோத கட போட
உறவானேன் நான்கூட ஆஆ
ஆண்: அளவில்லாம முப்போதும் கொண்டாடினா
அது பின்னால காட்டும் வேல
அளவு வேணும்னு முன்னோர்கள் சொன்னாங்களே
அத என்னாட்டி போவ கீழ
ஆண்: ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு
அத நம்பிட வந்திடும் சிறப்பு
பணிவா நீ இருந்தாலே கிடையாது சேதாரமே
ஆண்: உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஆண்: ஹேய் ஹேய் உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு
என்னாத்துக்கு பூச்சாண்டி
ஆண்: மஹாராணியா இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே
முழுசா நீ மாற வேணும்
ஆண்: வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய்

