அழகழகா

Azhagazhaga Lyrics in Tamil
Music: D. Imman
Singer: Pradeep Kumar

Azhagazhaga Lyrics in Tamil

ஆண்: அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து

ஆண்: கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

ஆண்: என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

ஆண்: அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து

ஆண்: வெண்ணிலா என்பது வானை நீங்கிட எண்ணிடுமோ
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமா

ஆண்: யாருது வாசல் என்று பார்த்து
சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்திமாலை

ஆண்: கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

ஆண்: அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து

ஆண்: அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது உண்மையிலே
அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ கைகளிலே

ஆண்: தாயவள் பாசம் தந்தையின் நேசம்
சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவெனெதானே
யாருமே உருவானோம்

ஆண்: மனம்போல் வாழ உறவே ஊஞ்சல்
கயிறாக அசையும் உயிரே

ஆண்: அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து

ஆண்: கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

ஆண்: என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team