Unna Vida Lyrics in Tamil – Kamal Haasan
பெண்: உன்ன விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல
பெண்: உன்ன விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல
ஆண்: உன்ன விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்ல யாருமில்ல
பெண்: வாக்கப்பட கிடச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாமும் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
பெண்: என்ன விட
உன்ன சரிவர புரிஞ்சிக்க
யாருமில்ல எவளுமில்ல
ஆண்: உன்னவிட
பெண்: என்னவிட
பெண்: அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்து உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம்
என்னை போலவே அலைபாயுது
ஆண்: நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வச்ச காத்தே
துதி பாடுது சுதி சேருது
பெண்: என்ன புது தாகம்
அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேருதான் மோட்சமா
மோட்சமா மோட்சமா
ஆண்: உன்னவிட
ஆண்: காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போர்த்திகிற நமக்கது மூடு துணி
பெண்: உன்னவிட
பெண்: உன்கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா
நூறு ஜென்மம் வேணும்
அத கேட்குறேன் சாமியே
ஆண்: என்ன கேட்குற சாமிய
பெண்: நூறு ஜென்மம் உன் கூட
ஆண்: போதுமா
ஆண்: நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம்
அந்த சாமிய அந்த சாமிய
பெண்: காத்தா அலஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆண்: ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்
பெண்: உன்ன விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை
ஆண்: உன்ன விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை எவளுமில்லை
ஆண்: வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி
பெண்: சாதி சனம் எல்லாம் அவன்தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
ஆண்: உன்ன விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை யாருமில்லை
பெண்: என்னவிட
ஆண்: உன்னவிட