உன் கூடவே பொறக்கணும்

Song Name: Unkoodave Porakkanum
Movie: Namma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)
Music: D. Imman
Singer: Sid Sriram
Lyricist: GKB(ஜி கே பி)
Year: 2019

Unkoodave Porakkanum Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும்
எப்போதுமே

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே

—பின்னணி இசை—

ஆண்: என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே

ஆண்: பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே

ஆண்: நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும்
எப்போதுமே

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே

பெண் குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும்
எப்போதுமே

பெண் குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே

—பின்னணி இசை—

ஆண்: அஞ்சு விரல்கள கோர்த்து
நாம பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோம்

ஆண்: சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே

ஆண்: எப்போதுமே என் கூடத்தான்
நேற்று நினைச்சேன்
இப்ப நீயோ போகும் போது
செத்து பொழச்சேன்

ஆண்: நீதானே கொலசாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு
நீ சொல்லிப் போயேன்

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும்
எப்போதுமே

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே ஏ

பெண் குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும்
எப்போதுமே

பெண் குழு: உன் கூடவே பொறக்கணும்

ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்

—பின்னணி இசை—

 

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team