சுடச்சுட தூரல்

Sudasuda Thooral Lyrics in Tamil
Movie: Kedi Billa Killadi Ranga(கேடி பில்லா கில்லாடி ரங்கா)
Music: Yuvan Shankar Raja
Singers: Yuvan Shankar Raja and Karthik
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Sudasuda Thooral Lyrics in Tamil

ஆண்: சுடச்சுட தூரல் பொழிவது நீதான்
தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்
எதிர்பாராத பூகம்பம் நீதான்
ஓஹோ என்னை நான் காணும் ஆரம்பம் நீதான்

ஆண்: முன்னிருப்பதும் நீதான்
பின்னிருப்பதும் நீதான்
என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே
உள்ளிருப்பது நீதான்

ஆண்: சிக்கவைப்பதும் நீதான்
சிக்கெடுப்பதும் நீதான்
என்ன செய்வது என்னை இப்படி
கத்த வைப்பதும் நீதான் நீதான்

ஆண்: என்னிடம் உள்ள
கெட்டதை நீ விலக்கி
நல்லதையே கொடுத்தாய் தேவதையே

ஆண்: நானே என்னை துறந்தேன் அடி
நீயே உண்மை உணர்ந்தேன் அடி

ஆண்: என்ன நினைத்தாலும் சொல்லிவிடுவேனே
இப்பொழுது ஏனடி தயங்குகிறேன்
சொல்லெல்லாம் நீயாகி போனாயே

ஆண்: அன்னையிடம் கூட இப்படி ஓர் பாசம்
கண்டதில்லை நான் என புரிகிறதே
வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே

ஆண்: எப்பவும் உன்னை எண்ணியே கண் உறங்கி
எத்தனையோ தினங்கள் ஆகியதே
பூவே உன் முன் இருந்தேன் அடி
ஆனால் இன்றே வாழ்ந்தேன் அடி

ஆண்: உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல்
அத்தனையும் நீயென நினைப்பதிலே
நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம்

ஆண்: தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே
நிம்மதியை நீ பெற துணை புரிந்து
சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம்

Other Songs From Kedi Billa Killadi Ranga