Sivapuranam Lyrics in Tamil
ஆண்: தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன் திருவாசகம் என்னும் தேன்
ஆண்: நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஆண்: இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
ஆண்: கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஆண்: ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
குழு: தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆண்: வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க
ஆண்: பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
ஆண்: கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
குழு: ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஆண்: ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
ஆண்: நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
ஆண்: சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
குழு: திருப்பெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
திருப்பெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
ஆண்: சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
ஆண்: சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
ஆண்: கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
ஆண்: விண் நிறைந்து மண் நிறைந்து
மிக்காய் விளங்கு ஒளியாய்
விண் நிறைந்து மண் நிறைந்து
மிக்காய் விளங்கு ஒளியாய்
ஆண்: எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
குழு: ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஆண்: புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
ஆண்: கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
ஆண்: வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
ஆண்: செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
ஆண்: எல்லாப் பிறப்பும்
பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
எல்லாப் பிறப்பும்
பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
குழு: திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருச்சிற்றம்பல நாயகா போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருச்சிற்றம்பல நாயகா போற்றி
ஆண்: மெய்யே உன் பொன் அடிகள்
கண்டு இன்று வீடு உற்றேன்
மெய்யே உன் பொன் அடிகள்
கண்டு இன்று வீடு உற்றேன்
ஆண்: உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
ஆண்: மெய்யே உன் பொன் அடிகள்
கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரமாய் நின்ற
ஆண்: மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஆண்: ஐயா எனவோங்கி
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
ஐயா எனவோங்கி
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
குழு: ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஆண்: வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
ஆண்: பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
ஆண்: எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
அகல்விக்கும் நல் அறிவே
குழு: தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆண்: ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
ஆண்: போக்குவாய் என்னைப்
புகுவிப்பாய் நின் தொழும்பின்
போக்குவாய் என்னைப்
புகுவிப்பாய் நின் தொழும்பின்
ஆண்: நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
நின்ற மறையோனே
குழு: ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஆண்: கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
ஆண்: பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
ஆண்: நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான்
மறைந்திருந்தாய் எம்பெருமான்
குழு: ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஆண்: வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
ஆண்: அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
ஆண்: மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
ஆண்: விலங்கு மனத்தால் விமலா
விலங்கு மனத்தால் விமலா
உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
ஆண்: நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி
ஆண்: நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
குழு: திருப்பெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
திருப்பெருந்துறை சிவனே போற்றி
திருவிளையாடல் நாயகா போற்றி
ஆண்: மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
ஆண்: பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
ஆண்: நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
ஆண்: பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
குழு: ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஆண்: ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஆண்: ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
ஆண்: நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
குழு: ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஆண்: அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆண்: ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
ஆண்: கூர்த்த மெய் ஞானத்தால்
கொண்டு உணர்வார் தம்கருத்தில்
கூர்த்த மெய் ஞானத்தால்
கொண்டு உணர்வார் தம்கருத்தில்
ஆண்: நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
குழு: திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருச்சிற்றம்பல நாயகா போற்றி
திருவண்ணாமலை ஜோதியே போற்றி
திருச்சிற்றம்பல நாயகா போற்றி
ஆண்: போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆண்: ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
ஆண்: மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஆண்: ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
உடையானே
குழு: ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஆண்: வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
ஆண்: போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
ஆண்: கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
ஆண்: நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
குழு: தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆண்: தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
ஆண்: சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
ஆண்: செல்வர் சிவபுரத்தின் உள்ளார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார்
ஆண்: சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
பல்லோரும் ஏத்தப் பணிந்து பல்லோரும் ஏத்தப் பணிந்து
குழு: ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
குழு: ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
குழு: தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி